சீனாவின் துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்!!!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கொரோனா என்ற நோய் தொற்றை உலகிற்கு அளித்த சீனாவுக்கும் அதன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மைக் போம்பியோ இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

கொரோனா தொற்றுக்கு ஆதிமூலமாக இருக்கும் சீனா உலக மக்களுக்கு அதிகபட்ச வேதனையை அளித்துள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோக காரணமானதும், அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதுமான கொரோனா குறித்த உண்மையான தகவல்களை மறைத்ததன் மூலம்  சீனா துரோகம் இழைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆசிரியர்