Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் வேலையில்லாமல் வெளிநாட்டைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை!

அமெரிக்காவில் வேலையில்லாமல் வெளிநாட்டைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை!

1 minutes read

அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டவரில் சுமார் 2 லட்சம் பேர் எதிர்வரும் June மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டவருக்கு H-1B விசா வழங்கப்படுகிறது. இந்த H-1B விசாக்களை பெற்று இந்தியாவைச் சேர்ந்த IT பிரிவு நிபுணர்கள், பணியாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் H-1B விசாவிலேயே வேலை செய்து வருகின்றனர். H-1B விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாகவுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் H-1B விசாவில் வேலை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் ஊரடங்கு சட்டம் இன்னும் நிறை பெறாத நிலையில், மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதுடன் 60 நாட்களுக்குப் பின் கால நீடிப்பிற்கு அனுமதி கோர முடியாது.

ஏற்கனவே H-1B சென்ற பலர் 30 முதல் 40 நாட்கள் வரை வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் உள்ளனர்.

இச் சூழ்நிலையில் H-1B விசாவில் வேலை செய்யும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் சர்வதேச விமான சேவைகள் இல்லாததால் அவர்கள் எப்படி தாய் நாட்டிற்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More