அனைத்துக்கும் காரணமான சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம்:அதிபர் டிரம்ப்.

கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தங்களை தவறாக வழிநடத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில், சம்மந்தம் இல்லாதவர்களுக்கே தெரிந்த பிறகுதான் உலக சுகாதார நிறுவனத்திற்கு பல விஷயங்கள் தெரியவந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியாத பல விஷயங்கள் தங்களுக்கு தெரியவந்திருப்பதாகவும், ஒன்று அவர்களுக்கு இந்த விஷங்கள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்ததை மறைத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழல் போல மாறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 400 மில்லியன் டாலர்கள் முதல் 500 மில்லியன் டாலர்கள் வரை அமெரிக்கா நிதியுதவி வழங்குவதாகவும், சீனாவோ வெறும் 38 மில்லியன் டாலர்கள் மட்டுமே நிதியுதவி வழங்குவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்