சீனாவை நம்பமுடியாது; உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ்தொடர்பான தகவல்களை  சீனா மறைத்து விட்டதாக கூறி  வரும் டிரம்ப், அதற்கு தண்டனை வழங்கும் நோக்கில் சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் அதிதீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

 டிரம்ப், நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில்  சீனாவை நம்பாமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாகவும் சீனாவின் வர்த்தக உறவுகளை துண்டித்து விட்டு வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சிக்கான  முக்கிய பொறுப்பை வகிக்கும்  கேத் கிராச் (Keith Krach) தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே சீன இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவிகித வரியை பலமடங்கு உயர்த்தவும் டிரம்ப் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்