மிகப்பெரிய கடன்கார நாடு அமெரிக்கா-சீனா

சீனா விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து நாடுகளும் ஐ.நா. அமைப்புக்கான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் அமெரிக்காவைப் பெரிய கடன்காரர் எனக் கூறியுள்ள சீனா, ஐ.நா. அமைப்புக்கான பங்களிப்பை அமெரிக்கா செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மட்டும் மிக அதிக அளவாக 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகச் சீனா அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்தக் கூற்றை மறுத்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தவறியதை மறைப்பதற்காகத் திசைதிருப்பும் வேலைகளில் சீனா ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஐயாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளதாகவும், வழக்கம்போல் ஆண்டு இறுதியில் மீதத் தொகையைச் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐநாவின் மொத்த பட்ஜெட்டில் 22 விழுக்காட்டையும், அமைதிகாக்கும் படைச் செலவுக்கு 25 விழுக்காட்டையும் அமெரிக்கா வழங்குகிறது.

ஆசிரியர்