பேசினால் பரவும் கொரோனா……..

இருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் நீர்த்திவலைகளால் கொரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்ட நிலையில், பேசினாலும் கூட கொரோனா பரவும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஒருவர் பேசும்போது வெளியாகும் உமிழ்நீர் மூலமும் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் என்று கூறப்பட்டுள்ளது.

அறிகுறியின்றி கொரோனா பாதிக்கப்பட்ட நபர் பேசினால், அவரது வாயிலிருந்து ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் நீர்த்திவலைகள் வெளியாவதாகவும், இவை காற்றில் 8 லிருந்து 14 நிமிடங்களுக்கு மிதந்தவாறே இருக்கக்கூடும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மற்றவர்களை விட சப்தமாக பேசக்கூடிய நபர்கள் 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. உமிழ் நீர் திவலைகளின் நீளம் மற்றும் வேகம் ஒவ்வொரு நபரின் பேச்சு, வயது, பேசும் போது எழும்பும் சத்தத்தின் அளவு ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது.

ஆசிரியர்