கொரோனாவை கட்டுப்படுத்த சீன மருத்துவர்கள் வருகை…..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சீனாவிலிருந்து மருத்துவக்குழுவினர் நாட்டிற்கு விரைந்துள்ளனர்.

தென்னமெரிக்க நாடான வில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிப்பதில் உதவவேண்டும் என சீனாவுக்கு நாடு வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்க, வல்லுனர் குழு ஒன்றை சீனா அனுப்பியுள்ளது.

கல்லாவோ நகர ராணுவ தளத்திற்கு வந்த மருத்துவக் குழுவினரை  பேரு  நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் விக்டர் சமோரா மற்றும் சீனத் தூதர் லியாங் யூ ஆகியோர் வரவேற்றனர்.

இந்த வல்லுனர்கள் குழு, கொரோனா நோய் வைரஸ் பரவுவது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்