போலியானவற்றை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த சீனா.

குறைபாடுகள் கொண்ட சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்ததாக சீன தயாரிப்பு நிறுவனத்தின் மீது, அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பாக நீதித்துறையில் அமைக்கப்பட்டுள்ள விலை அளவிடும் பணிக்குழு மேற்கொண்ட விசாரணையில், கிங் இயர் பேக்கேஜிங் அண்ட் ப்ரிண்டிங் எனும் சீன நிறுவனம், N95 எனும் பெயரில் போலியான மற்றும் குறைபாடுள்ள சுமார் 5 லட்சம் மாஸ்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பான, வழக்கின் விசாரணையில் குற்றம் உறுதியானால் அந்த நிறுவனம் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த நேரிடும்.

ஆசிரியர்