மடத்தனமாக அமெரிக்கா இருந்துள்ளது -டிரம்ப்

கொரோனா நோய் உலகிற்கு சீனா அளித்துள்ள கொடிய பரிசு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

வூகானில் நோய்த்தொற்று பரவத் தொடங்கிய போதே சீனா தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்றும், அங்கு மோசமான நிலையை எட்டிய போதும், அந்நகரைத் தவிர நோய் வேறு எங்கும் பரவவில்லை என்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க ஏராளமான உதவிகளை செய்ததாக தெரிவித்துள்ள டிரம்ப், எத்தனை மடத்தனமாக அமெரிக்கா இருந்துள்ளது என்று கூறினார்.

சீனா உள்ளிட்ட எந்த ஒரு நாட்டுடனும் ஒத்துழைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்த டிரம்ப், கொரோனாவுக்குப் பின் நடந்திருப்பது இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா இனி மிகுந்த கவனமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்