Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனா தீவிரம் ; தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை.

கொரோனா தீவிரம் ; தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை.

1 minutes read

சிலியில் தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்துள்ளார்.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நோய் பரவலை தடுக்க 3 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், தலைநகர் சாண்டியாகோவில் வாரத்தில் 5 முறைக்கு பதில் 2 முறை மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More