உலகின் உணவு பிரச்சனைக்கு ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் | ஜேனட் யெலன்

ரசியா சீனா மீது குற்றச்சாட்டு

உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம்.

ஜனவரி 20 2023 அன்று செனகலில் உள்ள டாக்கரில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வணிக காப்பகத்தில் பெண் தொழில்முனைவோருடன் நடந்த வட்டமேசை கூட்டத்தில் அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெலன் கலந்துகொண்டார்.

ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் என்றும அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதே போல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்தார்.

அவர் மேலும் அது தொடர்பில் இவ்வாறு கூறினார்.”ரஷ்யாவின் போர் மற்றும் உணவு ஆயுதமாக்கல் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியது மற்றும் சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது”

“ஒரு தனி மனிதனின் செயல்களால் உலகப் பொருளாதாரத் தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தில் தேவையற்ற இழுவையை உருவாக்குகிறார்.”என்று யெலன் கூறினார்.


ஆசிரியர்