தெற்கு லண்டனில் ரயிலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என இங்கிலாந்து போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
பெக்கன்ஹாம் மற்றும் ஷார்ட்லேண்ட்ஸ் ரயில் நிலையங்களுக்கு இடையில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டார்.
20 வயதுடைய இளைஞனே இவ்வாறு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தப்பியோடிய சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடத்தப்பட்டது. இந்நிலையிலேயே, சந்தேகநபர் இன்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஷார்ட்லேண்ட்ஸ் ரயில் நிலையத்தில் ஒரு ரயிலுக்குள் நுழையும் போது இருவர் சண்டையிட்டுக் கொண்டதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்தில் கத்தி ஒன்று மீட்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சம்பவ வீடியோவில் ஒரு இளைஞன், கருப்பு ஹூட் ஜாக்கெட், கருப்பு கால்சட்டை மற்றும் முகமூடி அணிந்த ஒரு பெரிய கத்தியைப் பிடித்திருப்பதைக் காட்டியது. மேலும், சக பயணிகள் அவரை நிறுத்தச் சொல்வதைக் கேட்க முடிந்தது.