இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மீட்கும் விதமாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளார்.ஜூலை மாதம் முதல் மிகப்பெரிய அளவில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மிகப்பெரிய ரிஸ்க்தான் என்றாலும் பொருளாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன் விஞ்ஞானிகள், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பிரிட்டன் மக்கள் தாங்கள் ஒரு நெருக்கடியான காலத்தில் வாழ்கிறோம் என்ற உணர்விலிருந்து மீள வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.வீட்டை விட்டு வெளியே வாருங்கள் , ஷாப்பிங் செய்யுங்கள் ,தாராளமாக செலவு செய்யுங்கள் என்று மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் எல்லோரும் கவனமாக சமூக இடைவெளியை கடைபிடித்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்கள் என்றும் இங்கிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.