September 21, 2023 2:00 pm

மும்பையில் தனது மெழுகுச் சிலையை திறந்துவைத்த பிரபுதேவாமும்பையில் தனது மெழுகுச் சிலையை திறந்துவைத்த பிரபுதேவா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் திரையுலகில் நடன உதவியாளராக ஆரம்பித்து பின்னர் நடிகராகி, தற்போது இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. நடன வகைகளில் பல புதிய முறைகளையும் இவர் உருவாக்கியுள்ளார். திரைப்படத்தில் தான் அமைத்த நடனத்திற்காக இவர் இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் இவர் இந்தியில் இப்போது முன்னணி இயக்குனராக உள்ளார். இந்தியில் இவர் இயக்கி வெற்றி பெற்ற ‘ரவுடி ரத்தோர்’ இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘ராம்போ ராஜ்குமார்’ படப்பிடிப்பில் இவர் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகின்றார்.

 

அஜய் தேவ்கான் மற்றும் சல்மான்கான் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களையும் இவர் இயக்க உள்ளார்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப்படும் பிரபுதேவாவின் மும்பை ரசிகர்கள் லோனாவாலா வேக்ஸ் மியூசியத்தில் இவரது மெழுகுச்சிலையை உருவாக்கியுள்ளார்கள். இந்தச் சிலையை பிரபுதேவா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

 

ரசிகர்களின் இந்தச் செயலால் மனம் நெகிழ்ந்த அவர், இதுகுறித்து இணையதளத்தில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்தச் சிலை உருவாவதற்குக் காரணமான சுனில் குழுவினரையும் அவர் பாராட்டியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்