கடலுக்குள் விழுந்தார் நடிகர் சத்யன்: படப்பிடிப்பில் பரபரப்புகடலுக்குள் விழுந்தார் நடிகர் சத்யன்: படப்பிடிப்பில் பரபரப்பு

ஜெய், நிவேதா தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நவீன சரஸ்வதி சபதம்’. இப்படத்தின் தலைப்பு முதலில் ‘சரஸ்வதி சபதம்’ என பெயரிடப்பட்டு பின் சர்ச்சைக்குள்ளானதால், ‘நவீன சரஸ்வதி சபதம்’ என மாற்றப்பட்டது.

 

இப்படத்தில் வி.டி.வி.கணேஷ், சத்யன், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை மலேசியாவில் உள்ள ரெடாங் என்ற தீவில் படமாக்கியபோது சத்யன் தீவுக்கருகில் கடலில் விழுந்துவிட்டாராம். இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது,

 

‘நவீன சரஸ்வதி சபதம்’ ஒரு காமெடி படம். மற்ற காமெடி படங்களைவிட இப்படத்தை கொஞ்சம் புதுமையை புகுத்தியுள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ரெடாங் தீவில் 25 நாட்கள் நடந்தது.

 

கடலுக்குள் சுமார் 4 மணி நேரம் படகு சவாரி செய்துதான் ரெடாங் தீவுக்கு செல்லமுடியும். அந்த தீவில் இரண்டு ரிசார்ட்ஸ் மட்டுமே இருக்கும்.

 

அங்கு படப்பிடிப்பு நடத்த சென்றபோது தீவுக்கருகில் கடலுக்குள் சத்யன் விழுந்துவிட்டார். எங்களின் பாதுகாப்புக்காக ஒரே ஒரு படகுதான் வரும். சத்யன் கடலில் விழுந்ததும் அவருக்கு நீச்சல் தெரியும் என்று பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.

 

ஆனால் சத்யன் விழுந்து சிறிதுநேரம் வரை வெளியே வராததால் நாங்கள் கூச்சல் போட்டு சத்யனை தேடச் சொன்னோம். அதன்பிறகு அவர்கள் கடலுக்குள் குதித்து சத்யனை மீட்டனர். பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவருக்கு சில முதலுதவிகளை செய்து அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர். அ

ஆசிரியர்