இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிச் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிச் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!

தமிழில் மார்க்கெட் வேகமாக உயர்ந்து கொண்டிருந்த நேரம் பார்த்து, சித்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு பறந்தார் அஞ்சலி. அந்த சமயம் கைவசம் இரண்டொரு படங்கள் இருந்ததால், அதை வைத்து புதிய படங்களை அதிரடியாக கைப்பற்றி ஆந்திராவில் கொடி நாட்டி விடலாம் என்பதும் அப்போதைக்கு அஞ்சலியின் கனவாக இருந்தது.

ஆனால், அவர் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. ஏனெனில் அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் அஞ்சலிக்கு பெரிய அளவில் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது வெங்கடேசுடன் மட்டும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் போதுமான வேலை வெட்டி இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்ததால், அஞ்சலியின் உடல்கட்டு பெருத்துவிட்டதாம். ஆதனால் புதிய பட வாய்ப்புக்களுக்கு அவர் தேடிச் செல்லும் இயக்குனர்கள் அஞ்சலியை சுத்த விட்டு பார்த்து இப்படி பெருத்துப்போய் இருந்தால் எப்படி ஹீரோயினி வேடம் தருவது என்று திருப்பிவிடுகிறார்களாம்.

ஆதனால் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி உடம்பைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம் அஞ்சலி.

இதன் காரணமாக இதுவரை ஹீரோக்களுடன் நட்பு வளர்க்கப்போகிறேன் என்று சொல்லி மிட்நைட் பார்ட்டிகளுக்கு சலிக்காமல் விசிட் அடித்துக்கொண்டிருந்த அஞ்சலி தனது உடம்பு பெருத்துப்போனதற்கு காரணத்தை புரிந்துகொண்டு இப்போது இரவு 10 மணிக்கு மேல் தனது செல்போனை சுவிச் ஆப் செய்து வைத்து விடுகிறாராம்.

ஆசிரியர்