ஆபாச படங்களில் நடித்திருப்பவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். படுகவர்ச்சியாக இவர் நடித்துள்ள ராகினி எம்எம்எஸ் 2 இந்தி படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடுபோடுகிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இந்து ஜன்ஜக்ருதி சமிதி (எச்ஜேஎஸ்) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் சார்பில் சினிமா தணிக்கை குழுவிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறி இருப்பதாவது: ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடித்திருக்கும் ராகினி எம்எம்எஸ் 2 என்ற படம் இந்திய கலாசாரத்துக்கு விரோதமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயரின் புனித தன்மையை கெடுக்கும் அளவுக்கு சன்னி லியோன் வேடம் அமைக்கப்பட்டிருப்பதுடன் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது.
இளைய தலைமுறையினரை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் சன்னி நடித்திருக்கும் இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். அத்துடன் அவரை நாடு கடத்த அரசுக்கு தணிக்கை துறை பரிந்துரை செய்ய வேண்டும்.
பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் இத்தருணத்தில் இதுபோன்ற படங்கள் சமுதாயத்தை மேலும் சீரழிக்கும்.
இதற்கிடையில் இப்படத்தை திரையிட்டிருக்கும் தியேட்டர் அதிபர்களும் உடனடியாக படத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தந்த தியேட்டர் முன் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.