Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜயுடன் இணையும் இளம் வயது திரிஷா!

விஜயுடன் இணையும் இளம் வயது திரிஷா!

1 minutes read

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம்   தளபதி 64.

இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார்.இந்தப் படத்தில் நடிகர் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரெனவும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா போன்றோர் கதாநாயகிகளாகநடிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புசென்னையில் 22 நாட்கள் நடந்தன.அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த  கௌரி கிஷான் தற்போது விஜய் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறும்போது,“விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருடைய ஆசிர்வாதத்தால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More