மலையாள குறும்படம் ‘ஒப்பம்:வெளியிடும் மோகன்லால்.

இயக்குனர் ஸ்ரீவரூன் சமீபத்தில் ‘ஒப்பம்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த கொரோனா தொற்றுக்குக்கு எதிராக மக்களின் உயிரைப் பாதுகாக்க முன்னிலையில் இருந்து வேலை செவை செய்யும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சமர்பிக்கும் விதமான இந்த குறும்படத்தை மோலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் “மலையாள குறும்படம் ‘ஒப்பம்’ வெளியிடுவதில் மகிழ்ச்சி. நந்து மற்றும் அணிக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறும்படத்தின் முடிவில் மோகன்லால் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படத்தில் வரும் கதாநாயகன் போன்றவர்களுக்கு நாம் அனுபவிக்கும் பாதுகாப்பிற்கு, நாம் எவ்வாறு கடன்பட்டிருக்கிறோம் என்பதை அவர் விளக்குகிறார். “இது ஒரு போர். ஒரு உளவியல் யுத்தம், இதற்காக கோவிட் போன்ற ஒரு தொற்றுநோயைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் – 19. இந்த காரணத்திற்காக ஒவ்வொரு சேவையும் விலைமதிப்பற்றது. அவர்களுடன் நிற்போம், வலுவாக போராடி அதை தோற்கடிப்போம். ஒரு நல்ல நாளைக்கு தயார் செய்வோம். லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்கிறார் மோகன்லால்.

இந்த குறும்படத்தில் நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரேனு சௌந்தர், ஹரிஶ்ரீ மார்டின், அஜு தோமஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆசிரியர்