தமன்னாவுடன் திருமணம் :சுனிஷித்.

நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ததாகவும் அவர் மூன்று முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்ததாகவும் தமன்னா உள்பட பல நடிகைகள் என்னுடன் தொடர்பு இருந்ததாகவும் நடிகர் ஒருவர் பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு இணையதள நடிகர் சுனிஷித் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’கடந்த 2015 ஆம் ஆண்டு லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் லாவண்யா மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும், அவர் என்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகை தமன்னா உள்பட மேலும் சில நடிகைகளுடன் தனக்கு தொடர்பு உண்டு என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பேட்டிக்கு மறுப்பு தெரிவித்த லாவண்யா திரிபாதி இது குறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர்களிடம் புகார் கொடுத்துள்ளார். மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளதாகவும் சுனிஷித் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் தனது புகாரில் லாவண்யா திரிபாதி கூறியுள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் உதவி கமிஷனர் பிரசாத் அவர்கள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சுனிஷித் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் அதன் பின் பொலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னணி நடிகைகள் லாவண்யா மற்றும் தமன்னா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறிய நடிகர் சுனிஷித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்