வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனனுக்கு கிடைத்த வாய்ப்பு.

சமீபத்தில் தனுஷின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் அனைத்து நடிகர் நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கம் மூலம் தனுசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதுமட்டுமன்றி விரைவில் தங்களுடன் இணைந்து பணிபுரிய மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் ஏதாவது ஒரு படத்தில் நம் இருவரையும் ஒன்றாக யாராவது இணைப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனுசுக்கு வாழ்த்து தெரிவித்து சந்தடி சாக்கில் வாய்ப்பையும் கேட்ட மாளவிகா மோகனனுக்கு தற்போது தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள தனுஷின் 43 வது படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறப்போகும் மாளவிகாவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மாளவிகா மோகனன் ஏற்கனவே பாலிவுட்டில் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்