மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் பட இயக்குனரின் பிறந்தநாள் பரிசு.

கடந்த சில ஆண்டுகளாகவே மாஸ் நடிகர்களுக்கு பிறந்தநாள் வரும் போதெல்லாம் காமன் டிபி போஸ்டர் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல நடிகர்களின் பிறந்தநாளின்போது காமன் டிபி போஸ்டர்களை திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர். இந்த காமன் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்களை அடுத்து தற்போது நடிகைகளுக்கும் காமன் டிபி போஸ்டர்கள் வெளியாக தொடங்கிவிட்டது. இதனை அடுத்து ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் பிறந்தநாள் காமன் டிபி போஸ்டரை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டர் மாளவிகாவின் பிறந்த நாள் சிறப்பு பரிசாக கருதப்படுகிறது.

மாளவிகாவுக்கு மிகவும் பிடித்த பிங்க் நிறத்தில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தை அடுத்து தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார் என்பதும், இந்த படத்திற்கு பின் அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்