மிக விரைவில் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு நன்கு தெரிந்த பிரபலங்களை ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் அடைத்து வைத்து அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து அந்த நிகழ்ச்சி நடைபெறும்.

ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு சீசனுக்கு ஏதாவது ஒரு பிரபலமான நடிகர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அந்த வகையில் தமிழில் தற்போது வரை கமலஹாசன் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. தெலுங்கு இளம் நடிகர் நானி ஒரு சீசனை தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த சீசனில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.

இப்போது தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தொடங்கியுள்ளது. அதனை நாகர்ஜுனா புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதே போல் தமிழிலும் மிக விரைவில் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

ஆசிரியர்