செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாஸ்டர் படத்தின் டிரைலர் திகதி அறிவிப்பு

மாஸ்டர் படத்தின் டிரைலர் திகதி அறிவிப்பு

0 minutes read

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மன்னனாக கொண்டாடப்படும் ஒரு நடிகர் தளபதி விஜய்.

இவர் தற்போது இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வம் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு மாஸ்டர் திரைப்படம் தியட்டரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தனது 65வது படத்தை நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வரும் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று வெளிவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பேசப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.