ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாகிய சமந்தா

இந்த ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பெரும்பாலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் நடிகை சமந்தா, கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் உருப்படியான வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வீட்டில் யோகா செய்வது மாடித்தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை அவரே அறுவடை செய்வது என பயனுள்ள வகையில் தனது ஓய்வு நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் இவை அனைத்தையும் வீடியோ மூலமாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ‘இதுபோன்று நீங்களும் உண்ணும் உணவை வீட்டிலேயே விவாசயம் செய்யுங்கள் என கூறி நடிகைகள் லக்ஷமிமஞ்சு, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தொடர கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆசிரியர்