கொரானாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்தியாவின் திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக மகன் எஸ்.பி.சரண் அறிவித்துள்ளார்.

கடந்த சில வாரமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்பில் வதந்திகளும் தீவிரமாக பரவியிருந்தன.

இந்நிலையில் அவர் சுவாசக் கோளாறினால் கடுமையாகச் சிரமப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின்கீழ் அவர் பராமரிக்கப்பட்டுவந்திருந்தார்.

இந்நிலையில் தந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மகன் சரண் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்