Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

1 minutes read

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் திடீரென தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரியும், அம்மன் வேடத்தில் இருந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

விஜயதசமி வாழ்த்துக்கள் கூறுவதற்காக அவர் அம்மன் அவதாரத்தில் போட்டோஷூட் எடுத்தாரா? அல்லது அம்மன் வேடத்தில் ஏதாவது திரைப்படம் நடிக்க உள்ளாரா? என்பது தெரியவில்லை. இருப்பினும் நயன்தாராவைப் போலவே கஸ்தூரிக்கும் அம்மன் வேடம் கச்சிதமாக பொருந்தி வருவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கஸ்தூரியின் இந்த புகைப்பட பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வழக்கம்போல் ஒருசில பாசிட்டிவ் கமெண்ட்டுகளையும் கலாய்க்கும் வகையில் சில நெகட்டிவி கமெண்ட்டுக்களையும் பதிவு செய்து வருகின்றனர். பதிவு செய்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More