Wednesday, March 3, 2021

இதையும் படிங்க

புகழின் அதிரடி வளர்ச்சி | குவியும் வாழ்த்துகள்

குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழின் வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி...

ஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில்...

மாரி செல்வராஜின் சிஷ்யன் இயக்கும் புதிய படம்

பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.பரியேறும் பெருமாள் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ்....

கதாநாயகியாக அறிமுகமாகும் பின்னணி பாடகி

தமிழ் திரை உலகின் முன்னணி பாடகியாக வளர்ந்து வரும் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தி, கதாநாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் வி. விநாயக் இயக்கத்தில் தயாராகிவரும் ...

விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன?

விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல...

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க...

ஆசிரியர்

நடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி

“13 வயசுல ஹீரோயின்… 10 வருஷ மேஜிக்… இப்ப பிசினஸ் ஸ்டார்!” – நடிகை ராதா ஷேரிங்ஸ்

1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ராதா. இவரின் அக்கா அம்பிகாவும் இவரும் ஒரே காலகட்டத்தில் புகழ்பெற்றனர். நடிக்க வந்து ஆறே ஆண்டுகளில் 100 படங்களில் நடித்ததுடன், 10 ஆண்டுகளில் 162 படங்களில் நடித்தார். இது இந்திய அளவில் எந்த நடிகையும் செய்திடாத `அடி தூள்’ சாதனை. சினிமாவில் புகழுடன் இருந்தபோதே திருமணமாகி, பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானவர், தற்போது வரை மீண்டும் நடிக்கவில்லை.

கேரளாவில் தனக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியவர், அது தொடர்பான படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். குடும்ப வாழ்க்கை, பிசினஸ் பயணங்கள் குறித்து ராதாவிடம் பேசினோம்.

குடும்பத்தினருடன் ராதா
குடும்பத்தினருடன் ராதா

கொரோனா லாக்டெளனில் மும்பையிலுள்ள வீட்டில் ஏழு மாதங்கள் முடங்கியிருந்தவர், தற்போது பிசினஸ் பணிகளில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். கேரளாவில் தனக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியவர், அது தொடர்பான படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். குடும்ப வாழ்க்கை, பிசினஸ் பயணங்கள் குறித்து ராதாவிடம் பேசினோம்.

“எங்க பிள்ளைங்க கார்த்திகா, விக்னேஷ், துளசி மூணுபேர் மேலயும் எனக்கு அளவு கடந்த பாசம் உண்டு. மேற்படிப்புக்காக மூணுபேரும் வெளிநாடுகளுக்குப் போனாங்க. அவங்களை ரொம்ப காலம் பார்க்காம என்னால இருக்க முடியாது. அதனால, வெவ்வேறு பகுதிகள்ல இருந்த அவங்களை சில மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கப் போவேன். தவிர, குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போவோம். பெரும்பாலும் டிராவல்லதான் இருப்பேன். போன வருஷம் பிப்ரவரி இறுதியில குடும்பத்தோடு தாய்லாந்துக்கு டூர் போனோம். அப்பவே அங்க பலரும் மாஸ்க் போட்டுகிட்டு கொஞ்சம் பதற்றத்தோடு இருந்தாங்க.

ராதா - அம்பிகா
ராதா – அம்பிகா

அப்போ கொரோனா பத்தி எங்களுக்கும் பெரிசா விழிப்புணர்வு இல்ல. இந்தியா திரும்பிய கொஞ்ச நாள்லயே நம்ம நாட்டுலயும் அதுபத்தின செய்திகள் பரவி, கட்டுப்பாடுகள் கடுமையாச்சு. பிறகு, மும்பையில இருக்கிற எங்க வீட்டுலயேதான் அஞ்சு பேரும் இருந்தோம். கேரளாவுல மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களும், ஸ்கூல், சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம்னு நிறைய பிசினஸ் வேலைகளை நிர்வகிக்கிறோம். கேரளாவுலயும் சென்னையிலயும் `ஏ.ஆர்.எஸ்’ங்கிற பெயர்ல ஸ்டூடியோ இருக்கு. மும்பையில பல ரெஸ்டாரன்ட்ஸ் நடத்தறோம். இதுலயெல்லாம் பல ஆயிரம் பேர் வேலை செய்யுறாங்க. லாக்டெளன் வந்த பிறகு, பிசினஸ் எதையும் நடத்த முடியல.

பிசினஸ் ரீதியா நிறைய சவால்கள் இருந்ததால நிறையவே வருத்தப்பட்டோம். நம்பிக்கையோடு சூழலைக் கடந்துவந்தோம். இனி ஆக்டிவ்வா வேலை செஞ்சு வளர்ச்சி பெறலாம்னு நம்பினோம். அந்த இறுக்கமான நிலையில் இருந்து என்னையும் கணவரையும் மீட்டது எங்க மூணு பிள்ளைங்கதான். படிப்பு, பிசினஸ்னு அவங்கவங்க வேலையா நாங்க தனித்தனியா இருந்தாலும், வருஷத்துல மூணு முறை தவறாம ஒண்ணு கூடிடுவோம். மும்பையிலுள்ள எங்க வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ரொம்பவே கோலாகலமா கொண்டாடுவோம். களிமண்ணுல விநாயகர் சிலை செஞ்சு, வழிபாடு நடத்தி, நீர்நிலையில கரைக்கிற வரைக்கும் எங்க வீட்டுல திருவிழா கோலம்தான்.

அம்மா, அக்காக்களுடன் ராதா
அம்மா, அக்காக்களுடன் ராதா

ஆண்டுதோறும் ஏதாச்சும் ஒரு வெளிநாட்டுல கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். தவிர, ஓணம் பண்டிகையின்போது என் குடும்பம், அம்பிகா அக்கா, மல்லிகா அக்கா, ரெண்டு தம்பிகள் குடும்பத்தாரும் கேரளாவுல இருக்கிற எங்க அம்மாவின் வீட்டுக்கு வந்துடுவாங்க. அஞ்சு பேரோட பிள்ளைகளையும் ஒரே இடத்துல பார்க்கிறது சந்தோஷமா இருக்கும். இதேபோலவே, லாக்டெளன்ல வீட்டுல முடங்கியிருந்த ஏழு மாதங்களும் மகிழ்ச்சியா இருந்துச்சு. அன்பு பரிமாற்றம், எதிர்காலத் திட்டமிடல், அரட்டை, விளையாட்டுனு கணவர், குழந்தைகளுடன் சந்தோஷமா இருந்தேன். டெக்னாலஜி விஷயங்களைப் பிள்ளைங்ககிட்ட இருந்து கத்துகிட்டேன். சோஷியல் மீடியாவை ஆக்டிவ்வா பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஓ.டி.டி தளங்கள்ல நிறைய சினிமாக்கள் பார்த்தேன்.

இந்த நிலையில, கடந்த ஆகஸ்ட் மாதம் எங்க ஹோட்டல் நிர்வாக வேலைகளைக் கவனிக்க கேரளா வந்தேன். இங்க இருக்கிற எங்க இன்னொரு வீட்டுலதான் இப்பவரை தங்கியிருக்கோம். கொரோனா பாதிப்பால பிசினஸில் பல வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு. இப்ப படிப்படியா ஹோட்டலை நாடி மக்கள் வர்றாங்க. ஆனா, கோவிட் பிரச்னைக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். எப்படியும் சமாளிச்சு வந்திடுவோம். கொரோனா பாதிப்பால ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து, புது வருஷத்தைச் சந்தோஷமா வரவேற்கணும்னு பார்ட்டிக்கு ஏற்பாடு செஞ்சோம். கேரளாவிலுள்ள எங்களோட `உதய் சமுத்ரா கோவளம்’ ஸ்டார் ஹோட்டல குடும்பத்தோடு புத்தாண்டு கொண்டாடினோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், சினிமா மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசினார்.

குடும்பத்தினருடன் ராதா
குடும்பத்தினருடன் ராதா

“எங்க வீட்டுல அம்பிகா அக்காவுக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே சினிமா மேல அதீத ப்ரியம். நிறைய படங்கள் பார்த்தே, அந்தந்த கேரக்டர் பெண்கள் இப்படித்தான் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டோம். அதனால, சினிமாவுக்குள் வந்த பிறகு, எந்த கேரக்டரா இருந்தாலும் எளிதா புரிஞ்சுக்கவும் கேரக்டர்ல ஒன்றிப்போய் நடிக்கவும் முடிஞ்சது. பாரதிராஜா சார் படத்துக்காக அம்பிகா அக்கா ஸ்கிரீன் டெஸ்ட்டுக்குப் போனாங்க. அந்தக் கதைக்கு அக்கா தேர்வாகல. எதேச்சையா என்னோட போட்டோவைப் பார்த்த பாரதிராஜா சார், `அலைகள் ஓய்வதில்லை’ படத்துல என்னை நாயகியா செலக்ட் பண்ணினார். அப்போ எனக்கு 13 வயசுதான்!

அந்தப் படத்துக்குப் பிறகு, நடந்ததெல்லாம் மேஜிக்தான். டீன் ஏஜ்லயே முன்னணி ஹீரோயினா ஹோம்லி, கிளாமர் ரோல்னு மாறிமாறி நடிச்சேன். அந்தச் சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. இரவு பகலா நடிச்சேன். எந்தச் சோர்வும் தெரியாத வகையில அம்மாவும், அக்கா அம்பிகாவும் எனக்கு உதவியா இருந்தாங்க. அதனாலதான், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளிலும் நிறைய படங்கள்ல நடிக்க முடிஞ்சது. தவிர, ஒவ்வொரு மொழியிலயும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்புகள் நிறையவே கிடைச்சது.

Radha
Radha

என்.டி.ராம ராவ் – பாலகிருஷ்ணா, சிவாஜி – பிரபு, நாகேஸ்வர ராவ் – நாகார்ஜுனானு, அப்பா – பிள்ளை ஸ்டார்களுக்கு ஜோடியா நடிச்சேன். வெற்றிகளும் அதிகம் கிடைச்சது. எனக்குக் கிடைச்ச பெயரும் புகழும் நானே எதிர்பார்க்காதவை. இந்திய சினிமாவுல யாருக்கும் கிடைக்காத பெருமையா அக்கா அம்பிகாவும் நானும் ஒரே நேரத்துல முன்னணி நடிகைகளா இருந்தோம். எங்களுக்குள் எந்தப் போட்டியும் இருந்ததில்ல. தமிழ், மலையாளம், கன்னடத்துல அக்கா பயங்கர பிஸி. தமிழ், தெலுங்குல நான் பிஸி.

என்னோட காஸ்டியூம், மேக்கப் விஷயங்கள்ல என்னைவிட அம்பிகா அக்காதான் அதிக அக்கறையோடு இருந்தாங்க. இப்ப வரைக்கும் அம்பிகா அக்கா என்னோட அம்மா மாதிரிதான். மல்லிகா அக்காவுக்கு சினிமா மீது விருப்பம் கிடையாது. அமைதியான குணம். பிசினஸ் பண்ணிட்டு இருக்கும் அவங்க எந்த இடத்துலயும் தன்னை முன்னிலைப்படுத்திக்க மாட்டாங்க. அதனால, அவங்கள பத்தி பெரிசா யாருக்கும் தெரியாது.

அம்பிகா - ராதா
அம்பிகா – ராதா

நடிப்பு, பிசினஸ்னு நாங்க பிஸியா இருந்தாலும், ஒருபோதும் குடும்பப் பாசத்தையும், அன்பையும் குறைச்சுகிட்டதில்ல. இதை எங்கக் குழந்தைகளுக்கும் கத்துக்கொடுத்திருக்கோம். நான் வளர்ந்த சினிமாங்கிற வீடுதான் எனக்கு நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. பிறந்த வீடு, அனுபவங்கள் கற்ற சினிமா வீடு, புகுந்த வீடுனு எனக்கு மூணு வீடு கிடைச்சதில் எப்போதும் அளவுகடந்த பெருமை. என்னைத் தேடி வந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி 10 வருஷங்கள் ஓய்வில்லாம நடிச்சேன். நடிகைகளுக்கு உண்மையான வாழ்க்கை தொடங்கறதே குடும்ப வாழ்க்கையிலதான். அதனால, இனி குடும்ப வாழ்க்கைக்குத்தான் முன்னுரிமைனு முடிவெடுத்தேன். அதன்படித்தான் இப்பவரை செயல்படுறேன்.

பிள்ளைங்களை கவனிச்சுகிட்டதுபோக, கணவரின் பிசினஸ்லயும் கவனம் செலுத்தினேன். ஒருகட்டத்துல பிசினஸ் மேல அதீத ஆர்வமும் அன்பும் ஏற்பட்டுச்சு. எங்க தொழில்களை விரிவுபடுத்தி நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோம். எங்களுக்குப் பிறகு, பிள்ளைங்கதான் பிசினஸ் பொறுப்புகளைக் கவனிக்கப்போறாங்க. அன்பான, திறமையான கணவர் ராஜசேகரன் நாயர், பாசமான குழந்தைகள்னு எல்லா விஷயங்களும் என் எதிர்பார்ப்புக்கு மீறியே கிடைச்சது.

Radha
Radha

அதனாலதான் என்னவோ தெரியல, இதுக்கிடையே எத்தனையோ சினிமா வாய்ப்புகள் வந்தும் ஏற்க முடியல. 30 வருஷமா நடிக்கலையே தவிர, சினிமா உலகத்தோடு தொடர்ந்து நட்பில்தான் இருக்கேன். கொரோனா காலத்துல இருந்து சோஷியல் மீடியா பயன்பாட்டுல எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கு. யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன். அதில், என்னோட சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டிருக்கேன். என்னோட சினிமா நண்பர்களைச் சந்திச்சு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கப்போறேன்” என்று கலகல சிரிப்புடன் நிறைவு செய்தார் ராதா.

நன்றி : விகடன்

இதையும் படிங்க

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் படம் கொரோனா...

தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்

சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு...

‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணையும் அதர்வா

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு...

உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் | கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்றைய தினம் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர்...

பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் "நகர வாழ்க்கையே சிறந்தது" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...

பிறந்த நாள் பரிசு | சிறுகதை

“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?” “இல்ல.....

குப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ

கண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

துயர் பகிர்வு