‘ஃப்ளாஷ்பேக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஃபிளாஷ்பேக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஃபிளாஷ்பேக்’.

இதில் நடனப்புயல் நடிகர் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான அனுசுயா பரத்வாஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகிறார்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

”காதலை மையப்படுத்தி படத்தின் திரைக்கதை உருவாகி இருந்தாலும், எழுத்தாளரான நாயகனுக்கும், ஆசிரியையான நாயகிக்கும் இடையே வளரிளம் பருவத்தில் ஏற்படும் காதலும் காமமும் கலந்த உணர்வை கண்ணியமான கனகாட்சிகளால் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்.” என்றார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பி. பிள்ளை தயாரித்திருக்கும் இந்தப் ‘ஃபிளாஷ்பேக்’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக்கில் பிரபுதேவாவும், ரெஜினா கசாண்ட்ராவும் ஆட்டோகிராப் பட பாணியில் தோன்றுவதால் இரசிகர்களிடையே இதற்கு ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

ஆசிரியர்