December 7, 2023 7:43 pm

கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் பொறுப்பை பேணுங்கள் | சமந்தா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திரையுலகில் சிறந்த நடிகையாக தனது கால்தடத்தை பதித்துள்ள சமந்தா அவர்கள் திடீர் என மயோசிட்டிஸ் எனும் நோயினால் பெரிதும் பாதிக்கபட்டிருந்தார் .

சில காலங்களுக்கு முதல் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக  இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்று சிகிச்சை பெற்று இந்தியா திரும்பியிருந்தார் .நடிக்க இருந்த படங்களை நடித்து முடித்து. தற்போது தனது சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல உள்ள நிலையில் அவரது நோய் தொடர்பிலும் அதற்காக அவர் பெறும் சிகிச்சைக்காகவும் பெரிய  தொகையை சக நடிகர் ஒருவரிடம் கடனாக பெற்றுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .

சுமார் 25 கோடியை அவர் கடனாக பெற்றுள்ளதாக தகவல் ஒன்று  சமூக வலைதலசங்களில் உலவும் நிலையில் தற்போது அதனை மறுத்துள்ளதுடன் தான் எந்த பணத்தையும் வேறு ஒரு நபரிடம் இருந்து பெற வேண்டிய தேவை எனக்கில்லை எனவும் மயோசிட்டிஸ் நோய்க்கு எக்காரணத்தை கொண்டும் இத்தகைய ஒரு தொகை தேவைப்படாது என்றும் என்னை  போல் சாதாரண மக்களுக்கு இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதனால் பொறுப்புணர்வுடனான  கருத்தை வெளியிடுங்கள் எனவும் கண்டித்துள்ளார் .

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்