செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் ‘ பெத்தி ‘ படத்தின் அப்டேட்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் ‘ பெத்தி ‘ படத்தின் அப்டேட்

1 minutes read

‘குளோபல் ஸ்டார் ‘ ராம்சரண் முதன்மையான கதாபாத்திரத்தில் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ பெத்தி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரை ரை  ரா ரா ..’எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம்சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதிபாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும்  சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் வழங்குகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரை ரை ரா ரா ‘எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். பிரம்மாண்டமான படமாக்கம் -அற்புதமான நடன அசைவு -வசீகரமான ஏ ஆர் ரஹ்மானின் குரல் – என பல அம்சங்கள் சங்கமித்திருப்பதால் இந்தப் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.