செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் முதல் காணொளி வெளியீடு

பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் முதல் காணொளி வெளியீடு

1 minutes read

பொலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய அளவிலான முதன்மையான கலைஞருமான ரன்பீர் கபூர் – ‘ராமாயணம்’ இதிகாசத்தின் காவிய நாயகனான ராமராக தோன்றும் ‘ராமாயணம்’ படத்தின் முதல் பாகத்தின் முதல் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘ராமாயணம்’  திரைப்படத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, சன்னி தியோல், ரவி துபே  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் ‘ராமாயணம்’ படத்தை பிரைம் ஃபோகஸ்- மாஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் – டி என் இ ஜி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் தீபாவளி திருவிழா விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் ரன்பீர் கபூரின் கதாபாத்திர தோற்றம் தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி ரசிகர்களுக்கு இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரத்தை சர்வதேச தரத்தில் பிரதிபலிப்பதால்… வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இருபது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. தோராயமாக இரண்டரை நிமிடங்கள் நீடிக்கும் இந்த காணொளியில் ராம பிரானாக நடித்திருக்கும் நடிகர் ரன்பீர் கபூரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், பக்தி கலந்த ஆன்மீக உணர்வை எழுப்புவதால் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.