March 26, 2023 10:39 pm

வெள்ளையாக வேண்டுமா பெண்களே இரவில் இதைசெய்யுங்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நமது சருமத்தின் நிறம் மற்றும் சரும பொலிவை அதிகரிக்க இயற்கையில் உள்ள சில வழிமுறைகளை தினமும் இரவு உறங்கும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மசாஜ்
தினமும் இரவு ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகச் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி அடையும்.

உப்பு
சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து, அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து வர வேண்டும்.

கடலை மாவு
கடலை மாவு, பால், மஞ்சள் தூள் போன்றவற்றை கொண்டு தினமும் முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டு வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர்
பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரை நனைத்து, அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தினமும் துடைத்து, 1 மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஐஸ் கட்டிகள்
2-3 ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து கட்டி, அதை தினமும் இரவில் முகத்தில் மசாஜ் செய்து வர ரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாகும்.

கற்றாழை ஜெல்
கற்றாழையின் ஜெல்லை தனியாக எடுத்து அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் தினமும் கழுவி வர வேண்டும். இதனால் சருமம் வறட்சி அடையாது.

ஆவிப் பிடிப்பது
தினமும் இரவில் படுக்கும் முன் 5-10 நிமிடம் சுடுநீரில் ஆவி பிடித்து, துணியால் நன்கு துடைத்து வந்தால் சருமத்துளைகள் திறந்து, அழுக்குகள் வெளியேறிவிடும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்