December 7, 2023 1:01 am

லண்டனில் விவேகானந்தனின் நூல் வெளியீட்டுக்கு மக்கள் பேராதரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனடா வாழ் கல்வியலாளர் பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இலண்டனில் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் வருகை தந்து அரங்கை நிறைத்திருந்தனர்.

அதேவேளை இந்த நிகழ்வில் எழுத்தாளர் மாதவி சிவலீலன் தலைமையில், பேராசிரியர் மகேசன் நிர்மலன், திரு நிராஜ் டேவிட், திருமதி அகல்யா நித்தியலிங்கம், வைத்தியர் சங்கவி கஜமுகன், திருமதி சுகுணா சுதா, திருமதி துவாரகி நிலக்சன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வுக்காக கனடாவிலிருந்து வருகைதந்த வெளியீட்டுரையும்  தாய்வீடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பி ஜெ டிலிப்குமார் வழங்கினார். இதேவேளை இலக்கிய ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளையோர்கள் என பலரும் அரங்கை நிறைத்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு எல்லோரும் அள்ளித்தந்த ஆதரவுக்கு வணக்கம் இலண்டன் மற்றும் கிளி பீப்பிள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்