Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் விதவைகள்! | கவிதை | பரமேஸ்வரி சுப்பிரமணியம்

விதவைகள்! | கவிதை | பரமேஸ்வரி சுப்பிரமணியம்

1 minutes read

பிறப்பு என்பது வாழ்வில் ஓர் அம்சம்-/-
இறப்பு என்பதும் வாழ்வில் ஓர் அம்சம்-/-
பிறப்பும் இறப்பும் நிச்சயம் நிகழும்-/-
மறந்து போகாமல் நினைவில் நிறுத்து-/-

அநாதை, ஏழை ,விதவை,அகதி-/-
கதையாகத்தொடரும் மனித வாழ்வில்-/-
கீதை உபதேசம் ஞானத்தை கொடுக்கும்-/-
அதை மனதில் நிறுத்து சஞ்சலம் ஒழியும்-/-

ஆன்மா என்பது அழிவற்ற ஒன்று-/-
தினமும் உன்னுள் சுற்றும்உன் உறவு-/-
பாவிகள் உள்ளத்தில் இது எங்கே புரியும்-/-
பழியும் பாவமும் நிறைந்த அவர் மனதில்-/-

நீயும் ஒரு நாள் அநாதையாய் வருவாய்-/-
காயும் வயிற்றுடன் அகதியாய் அலைவாய்-/-
விதவை என்று உன் நாவினால் சொன்னசொல்-/-
பத்தும் பலதுமாய் உன்னையே சூழும்-/-

துடிக்கும் இதயங்கள் துடிப்பெங்கே புரியும்-/-
நடிக்கும் உன் நடிப்பால் அமுதம் கொட்டும்-/-
ஏழை என்றால் ஏன் உனக்கு ஏழனம்-/-
மழைபோல் அவரின் மனமெங்கே தெரியும்-/-

தாயவள் விதவைக் கோலம் பூண்டால்-/-
தயவு தாட்சண்யம் எங்கே போகும்-/-
தூயவள் விதவைக் கோலம் கண்டு-/-
தரணியில் துடிப்போர் பல பேர் உண்டு-/-

மனமெல்லாம் கல்லாய் இறுகிய சில பேர்-/-
தாயையும் தாட்டு காலால் மிதிப்பார்-/-
வாய்மை உள்ளம் படைத்தவரிடையே-/-
தாயே கடவுளாய் உயர்ந்து நிற்ப்பாள்-/-

இந்த உண்மை உனக்கெங்கே புரியும்-/-
சிந்தை அறிவை மறந்த உனக்கு-/-
வித்தை பல்லாயிரம் கற்றுக்குடுத்ததுமேன்-/-
மந்தை கூடத் தன் தாயை மதிக்கும்-/-

வன்னிப்போரில் எத்தனை பெண்கள்-/-
கத்திக்கதறி விதவையாய் துடித்தார்-/-
அந்தக்கதறல் உனக்கு இசையா?-/-
பதறும் அவரின் இதயம் புழுதி வீணையா?-/-

தங்கை ,தாரம் ,தாய் ,சேய் என்போர்-/-
உந்தன் உறவில் அங்கம் அல்லவா?-/-
இந்த உறவுகள் போலியா?கேலியா?-/-
விதவை என்று ஏன் விண் கூவி நிற்கின்றாய்-/-

வருத்தம் கஸ்டம் கண்ணீர் கவலைகள்-/-
வருத்தும் பெண்களை கோழைகள் ஆக்கும்-/-
புதுமைப்பெண்களே புரிந்து கொள்ளுங்கள்-/-
விதவை என்ற சொல் உங்களிற்கு இல்லை-/-

– பரமேஸ்வரி சுப்பிரமணியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More