Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வீடுகளில், சங்கங்களில்  மின் நூலகம் l பொன் குலேந்திரன்

வீடுகளில், சங்கங்களில்  மின் நூலகம் l பொன் குலேந்திரன்

2 minutes read

   

இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழ் நூல்கள் வாசிப்பது குறைந்து வருகிறது மேடைகளிலும் ஊடகங்களிலும் எழுத்தாளர்களும்  தமிழை வளர்ப்போம் என்று வீரம் பேசுவார்கள். இவர்களில் எத்தனை பேர்களின் வீடுகளில் மின்நூலகம் அமைத்து தினமும் குறைந்து இருமணி நேரம் தமது நேரத்தை வாசிப்பில் செலவு செய்கிறார்கள்?

தமிழ்  எழுத வாசிக்கத் தெரியாத தமது குழந்தைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு  கதைகளை வாசித்து காட்ட முடியும். இதுக்கு   தேவை மடிக் கணனி, மேசைக கணனி அல்லது  ஐ பாட் கிண்டில் கருவி  (Desktop.or lap top or  iPad 0r  Kindle reader ) கூடவே மின் அஞ்சல் தேவை.

அச்சிட்ட நூல்கள் விலை அதிகம் பகிரும் பிரச்னை உண்ணட்டு அமேசானில் இப்பொது தமிழ் மின் நூல்கள் மட்டுமே வெளியிட முடியும்  சில நூல்கள் கிடைப்பது அரிது  இடத்தையும்  பிடித்துக் கொள்ளும். மின் நூல் வெளியீட்டு விழா வைப்பது  மிக அருமை நூல்களை கொடுத்தால் திரும்பி வராது  இலகுவில் திருட்டு போய் விடும் இது மின் நூலகத்தில்  நடக்காது அதற்குக் கடவுச் சொல் (Pass word)உதவும். எழுத்துருவை பெரிதாக்கி  அச்சிட்ட நூல்கள் வாசிக்க முடியாது சில சமயம் முதியோரும். பார்வை குறைந்தவர்களும்   பூதக் கண்ணாடி பாவித்து வாசிக்க வேண்டிய நிலை ஏற்படும் .

நூல் வாசிப்பு மனக் கவலையைப் போக்கும். மூளைக்கு செயல் கொடுப்பதால்  அல்சேய்மார் வியாதி வராது தடுக்கும். உடலில் இருக்கும் வியாதி பற்றியே எபோதும் சிந்தித்து மேலும் வியாதியை அதிகரிக்காமல்  தடுக்கும் . அதோடு மட்டுமல்லாமல்  வாசிப்பு அறிவை வளர்க்கும். கிணற்று தவளைகள் போன்ற நிலை மாறும். வீணாக  நேரத்தை  வதந்தி பேசி வீண் அடிப்பதில் எந்த பயனும் இல்லை.

ஆகவே ஒரு மின் நூலகத்தை வீட்டில்  அமைத்து உங்கள் கணனியில் அல்லது கிண்டேலில் பதிவு செய்து வாசிக்கலாம்.  வாசிக்கும் கிண்டல் கருவி (Kindle Reader)இருந்தால் எங்கும் எப்போதும் எடுத்து சென்று வேண்டிய நேரம் வாசிக்கலாம்.

இந்த மின் நூலக குழுவில் எல்லா முதியோர் சங்கங்களும் கணனி பாவிக்க தெரிந்த முதியோரும் மற்றோரும்  சேர்வது நன்மை பயக்கும்.

 என்னுடன் மின் நூலக குழுவில் சேர விரும்புவோர் என் மின் அஞ்சலுக்கு தமிழில் அல்லது ஆங்கிலத்தில் செய்தி அனுப்பவும் என் மின் அஞ்சல் இந்தக் குழுவில் குறைந்தது ஐம்பது பேர் சேர்ந்தால் பின் ஆங்கில மின் நூலகம் பற்றி யோசிக்கலாம்.

தமிழ் வளர. தமிழ் மொழி மேல் பற்றுள்வர்கள்  தமிழ்  ஊடகங்கள், சங்கங்கள்  இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும். எல்லாமே இலவசம் கணனியும் மின் அஞ்சலும் மட்டுமே தேவை.

இனி  குழுவில் உள்ளோருக்கு மட்டுமே  மின் நூல்களை அனுப்புவேன். அந்த நூல்களை கட்டுரை. கவிதை, நாவல், சிறுகதைகள் ஆகிய பிரிவுகளாக கோப்புறை  (Folder) யில்  சேமிக்கலாம் தேடுவது இலகு.

தயவு செய்து இந்த மின் நூல்  கிடைத்தவுடன் பதில் போடவும் இந்த பழக்கம் எமது தமிழ் சமுதாயத்தில் மிகக் குறைவு. நன்றி ,மின் அஞ்சலுக்கு  என்று பதில் வராது . அதனை gmail  இலகு படுத்தி விட்டது முக்கியமாக  ஈழத்தில் ஒவ்வொரு வாசகசாலையில்  இதை உருவாக்க வேண்டும்  செய்வீர்காளா நண்பர்களே?

என் மின் அஞ்சல் kulendiren2509@gmail.com

  Tel 289 652 9185

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More