தமிழ் வழி ஆடல் பயணம் | கவிதா லட்சுமி

21 ஆண்டுகாலக் கலைப்படைப்பாக்க மற்றும் கற்பித்தல் பயணத்தில் கலாசாதனா கலைக்கூடம் மனதுக்கு நிறைவான புதிய அத்தியாயமொன்றினை எட்டியுள்ளது. தமிழகத்தின் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துடன் கூட்டிணைவு உடன்படிக்கை 19.09.2022 கைச்சாத்தாகியுள்ளது.

நடனம், இசை இசைக்கருவிகள் மற்றும் மரபுவழி ஆடல்கள் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் திறனறிதல், தேர்வுகள் சார்ந்து இனிவரும் காலங்களில் கலாசாதனா கலைக்கூடமும் தஞ்சாவூர் பல்கலைக்கழகமும் இணைந்து செயற்படவுள்ளதென்பது உடன்படிக்கையின் உள்ளடக்கமாகும்.

அத்தோடு எம்மால் உருவாக்கப்பட்டுவரும் ‘நடம்புரி – தமிழ் வழி ஆடல்’ பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, பாடத்திட்டத்திலும் உள்ளடக்கப்படவுள்ளது. புலம்பெயர் சூழலில் கலைத்துறை சார்ந்த கற்றலின் நிலைகொள் தொடர்ச்சிக்கும் தரத்திற்கும், பரிமாற்றத்திற்கும் இக்கூட்டிணைவு வழிவகுக்கும்.

எனதும் கலாசாதனா கலைக்கூடத்தினதும் பயணத்தில் இது மகிழ்ச்சியும் பெருமிதமும் தருகின்ற அடைவு. இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மனநிறைவடைகின்றேன். தமிழ் வழி ஆடல் பயணத்தில் எம்மோடு பயணிக்கும் அனைத்து தோழமைகளுக்கும் எமது அன்புகள்.

தொடர்ந்து பயணிப்போம் ❤

கவிதா லட்சுமியின் முகநூலில் இருந்து

ஆசிரியர்