Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருது

ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருது

3 minutes read

அவுஸ்திரேலிய ஈழத்து எழுத்தாளர் பேராசிரியர் ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசாங்கத்தால் அவரது பணச்சடங்கு என்னும் நூலுக்கு சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். 20 வருடங்களுக்கு முன்பும் அவரது பாவனை பேசலன்றி என்னும் சிறுகதை தொகுப்பிற்கு சாகித்திய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கிவரும் ATBC வானொலியில் முன்பு தன்னார்வமாக கடமையாற்றி, தற்போது தாயகம் வானொலியிலும் பிரதி புதன்கிழமை தோறும்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

அவரை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றாலும் இணையத்தில் தேடி அவரைப்பற்றிய சிறு குறிப்பை தொகுத்துள்ளேன்.

ஆசி. கந்தராஜா ஒரு  பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, யப்பான் மற்றும் அவுத்திரேலியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணி புரிந்து தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக கடமையாற்றுகின்றார். 

வாழ்க்கைக் குறிப்பு

ஆசி. கந்தராஜா யாழ்ப்பாணத்திலுள்ள கைதடி கிராமத்தில் பிறந்தார். தந்தை ஆ. சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ் ஆசான் ஆவார். கிழக்கு செருமனி அரசின் புலமைப் பரிசில் பெற்று 1974ஆம் ஆண்டு உயர் கல்வி கற்கச் சென்ற ஆசி. கந்தராஜா, பின்னர் மேற்கு செருமனியிலும் புலமைப் பரிசில் பெற்று கிழக்கிலும் மேற்கிலுமாக மொத்தம் 13 ஆண்டுகள் படித்தவர் பணிபுரிந்தவர்.1987 தொடக்கம் புலம் பெயர்ந்து அவுத்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்

*பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு – மித்ர வெளியீடு 2000)

*தமிழ் முழங்கும் வேளையிலே (செவ்விகளின் தொகுப்பு – மித்ர வெளியீடு 2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)

*உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு – மித்ர வெளியீடு 2003)

*Horizon (மித்ர பதிப்பகம், 2007, ஆங்கில மொழிபெயர்ப்பு)

*கீதையடி நீயெனக்கு… (குறுநாவல் தொகுப்பு, மித்ர வெளியீடு (2014), ISBN 978-93-81322-29-1)

*கறுத்தக் கொழும்பான். (புனைவுக் கட்டுரை தொகுப்பு, மித்ர வெளியீடு (2014), ISBN 978-93-81322-28-4)

*செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். (புனைவுக் கட்டுரை தொகுப்பு. ஞானம் வெளியீடு (2017), ISBN 978-955-8354-53-7)

*கள்ளக்கணக்கு (சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2018), ISBN 978-93-86820-49-5)

*ஹெய்க்கோ (சிறுகதைத் தொகுப்பு, சிங்கள மொழிபெயர்ப்பு. ‘கொடகே’ பதிப்பகம் (2019), ISBN 9789553095794)

*பணச்சடங்கு (சிறுகதைத் தொகுப்பு, எங்கட புத்தகங்கள் வெளியீடு யாழ்ப்பாணம் (2021), ISBN 978-624-97823-1-0)

*மண் அளக்கும் சொல் (புனைவுக்கட்டுரைகள், காலச்சுவடு வெளியீடு (2022), ISBN 978-93-5523-057-7)

பரிசுகளும் விருதுகளும்

*இலங்கை அரச சாகித்திய விருது (2001), பாவனை பேசலன்றி – சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக.

*இந்திய சாகித்திய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ள ‘கண்களுக்கு அப்பால். இதயத்திற்கு அருகில்…’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் (2015) இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.

*திருப்பூர் இலக்கியவிருது 2016 ‘கறுத்தக்கொழும்பான் புனைவுக் கட்டுரைத் தொகுதி’

*தமிழியல் விருது 2015. கறுத்தக் கொழும்பான் நூலுக்கு…! *வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது.

*திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 2015. கீதையடி நீயெனக்கு… குறுநாவல் தொகுதிக்கு. மித்ர பதிப்பகம்

*திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் பரிசும் 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு (2018)

*இந்திய தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை விருதும், பணப்பொதியும். 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு (2018)

*திருப்பூர் இலக்கியவிருது 2019. படைப்பிலக்கியம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More