Tuesday, September 28, 2021

இதையும் படிங்க

செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்

நாளைய தினம் 23 ஆம் திகதி - இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ்...

கறங்குபோல் சுழன்று | துவாரகன்

இந்தக் காலத்திற்குஎன்னதான் அவசரமோ?சுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...

நல்லதோர் லய ஞானக் கலைஞனை இழந்தோம் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் இரங்கல்

தன் ஆத்மார்த்தமான வாசிப்பினால்  எங்கள் இசையுலகில் தடம் பதித்த. மிருதங்க, தப்லா கலைஞர் சதா வேல்மாறன் அவர்களின்...

கவிதை | குப்பி விளக்கு | கேசுதன்

ஏழையின் மின்விளக்குபாமரனுக்கும் படிப்பு குடுத்த ஒளிவிளக்குபல்கலையும் பெற்றான்பட்டமும் பெற்றான்உயிர் உள்ளவரை ஒளிகொடுத்தமேதை அவன்மார்தட்டிக்கொண்டதில்லை தன் உயிரோடு நிழலாடி இன்னொருவன்...

அண்ணாவை நினைக்கின்றோம் | கவிக்கிறுக்கன் முத்துமணி

மண்ணாய் கிடந்த மறத்தமிழர் உதிரம்அண்ணா என்ற அடலேறு வந்தபின்னால்பொன்னாய் மின்னியது புனலாய் பொங்கியதுசின்னானும் சேவகனும் சீமைத்துரை...

பிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை

மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...

ஆசிரியர்

வாராணசி கவிதைகள் | சுகுமாரன்

காலம்       

ங்கே

காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று

காலங்களுக்கு அப்பாலான  காலம்

 

இங்கே

இன்று பிறந்த இன்றும்

நாளை பிறக்கும் நாளையும்

பிறந்ததுமே

இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன

 

இங்கே

அன்றாடம் உதிக்கும் சூரியன்

முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது

முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது

 

இங்கே

காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்

யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்

மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.

 

இங்கே

ஒசிந்து பெய்யும் மழையில்

முதலாவது மேகத்தின்

உலராத ஈரம் தேங்கியிருக்கிறது.

 

இங்கே

பிரபஞ்சத்தின் சுவாசத்தால் சிலிர்த்தோடும் நதியில்

ஆதி நாடோடியின்

உமிழ்நீர் ஊறிச் சுவைக்கிறது.

 

இங்கே

மரங்களிருந்து கேட்கும் பறவைக் குரல்களில்

மொழிக்கு முந்திய மௌனத்தின் வார்த்தைகள்

எழுத்துக் கூட்டி உச்சரிக்கப்படுகின்றன

 

இங்கே

குறுகிய சந்துகளில் பதியும் புதிய காலடிகளின்கீழ்

ஆயிரமாயிரம் அறியாச் சுவடுகள் புதைந்திருக்கின்றன

 

இங்கே

முதலாவது கங்குதான் கனன்று கனன்று

உயிரின் சுடராக அலைந்து அலைந்து இன்னும் எரிகிறது

 

இங்கே

வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது

சாவின் கொள்ளிகளுக்கு இடையில் வாழ்க்கை புன்னகைக்கிறது.

 

இங்கே

மனிதர்கள் வந்துபோவது

இன்றை விருந்தோம்பவோ

நாளையை வரவேற்கவோ அல்ல

இறந்த காலத்தில் புகலடைய

 

ஏனெனில்

வாராணசியில் காலம் ஒன்றே ஒன்று

காலங்களைக் கடந்த காலம்.

 


 

உஸ்தாத்

 

 கதவுஎண்சி.கே. 46 / 62,  

 ஹராகாசராய்வாராணசி

 

மேற்குறிப்பிட்ட முகவரி இல்லத்தில்

பிஸ்மில்லா கான் இல்லை

ஆனால்

அந்த வீட்டில்தான் அவரைப் பார்த்தேன்

 

குறுகிய வரவேற்பு அறை மூலையில்

அவருடைய காலணிகள் இல்லை

ஆனால்

தாளகதியுடன் நகரும் இரண்டு பாதங்களை

அந்த மூலை அருகில்தான் பார்த்தேன்

 

கூடத்தின் தரையில் செவ்வண்ண ஜமக்காளத்தின் மீது

அவர் உட்கார்ந்திருக்கவில்லை

ஆனால்

சுருதி பிடித்து மகா குரு ஸ்வரம் கற்பிப்பதை

ஜமக்காளத்தின் மறுமுனையில் அமர்ந்துதான் பார்த்தேன்

 

ளுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தும்

அறைக்குள்  அசைவில்லை

ஆனால்

இருகை உயர்த்தி இறைஞ்சும் குல்லா அணிந்த நிழல்

அந்த மேற்குச் சுவர்மேல் அசைவதைப் பார்த்தேன்.

 

காட்சிப் பேழைக்குள்

வரிசையாக மௌனித்திருந்த குறுங்குழல்கள்

அப்போது உயிர்பெற்று விம்முவதைக் கேட்டேன்

 

விழிபனிக்க நிலத்தில் மண்டியிட்டு வணங்கி நிமிர்ந்தேன்

ஒரு முதிய ஆள்காட்டி விரல்

கண்துளிர்ப்பைத் துடைப்பதைக்

கண்ணி்மைக்காமல் பார்த்தேன்

 

அந்த விரலை முகர்ந்தபோது

பனாரசி பானின் வாசனையும்

கங்கையின் குளிர்ச்சியும்

மண்ணின் சொரசொரப்பும் இருந்தன.

வானத்தின் தழுதழுப்பும் இருந்தது.


 

முக்தி

 

காசிக்கு வந்தால்

அதி விருப்பமானதை

இங்கேயே கைவிட்டுப் போவது மரபு.

 

மரபுக்கு அஞ்சி

ஒவ்வொருவரும்

ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகிறார்கள்

 

சிலர் அம்மாக்களை

சிலர் பிள்ளைகளை

சிலர் மனைவிகளை

சிலர் கணவர்களை

சிலர் காதலிகளை

சிலர் அநாதைகளை

சிலர் ரட்சகர்களை

 

இவ்வாறு  கைவிடப்பட்டவர்களால்

நகரம் நெரிபடுகிறது.

 

சிலர் ஆடுகளை

சிலர் மாடுகளை

சிலர் குதிரைகளை

சிலர் மயில்களை

சிலர் பன்றிகளை

சிலர் குரங்களை

சிலர் காகங்களை

 

இவ்வாறு கைவிடப்பட்டவையால்

தெருக்கள் முட்டிக்கொள்கின்றன.

 

சிலர் ஆடைகளை

சிலர் ஆசைகளை

சிலர் மலர்களை

சிலர் நம்பிக்கைகளை

சிலர் பிணங்களை

சிலர் சாம்பற்குடங்களை

சிலர் ஆவிகளை

 

இவ்வாறு கைவிடப்பட்டவற்றால்

படித்துறைகள் திணறுகின்றன

 

சிலர் ருசியை

சிலர் காட்சியை

சிலர் கேள்வியை

சிலர் மணத்தை

சிலர் தொடுகையை

சிலர் உணர்வை

சிலர் அறிவை

 

இவ்வாறு கைவிடப்பட்டவையால்

கங்கை விம்முகிறது

 

சிலர் கனவை

சிலர் நம்பிக்கையை

சிலர் காமத்தை

சிலர் மோகத்தை

சிலர் ஞாபகத்தை

சிலர் தேகத்தை

சிலர் ஆன்மாவை

 

இவ்வாறு கைவிடப்பட்டவற்றால்

விசுவநாதன் தடுமாறுகிறான்.

 

ஒவ்வொருவரும்

ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகும்போது

கையோடு காசியையும் கொண்டு போகிறார்கள்.

ஒவ்வொருவரும்

ஒவ்வொருமுறையும்

காசியை நினைக்கும்போதும்

கைவிட்டவையும் கூடவே வராதா?

காசியையும் கைவிடுவதுதானே கதி மோட்சம்?


 

சுடர்கள்

ல்லாயிரம்கோடிக் கைகள் கற்பகோடிக் காலம்

தொட்டுத் தழுவி உயிரூட்டிய

நம்பிக்கைக் கல்லை நலம்விசாரித்து

ஆலய வாசலில் வந்து அமர்ந்தேன்.

 

ஒட்டி அமர இடங்கேட்டு முன்னால் நின்றவனுக்குப்

பனித்த சடை, பவளமேனியில் பால்நிறச் சாம்பல்,

குனித்த புருவம், கோணற்சிரிப்பு,

இடது பொற்பாதத்தில் பித்த வெடிப்பு.

 

உடல்நகர்த்தி உட்கார இடம் கொடுத்தேன்

கைவச உணவில் கொஞ்சம் கொடுத்தேன்

யுகப்பசியுடன் விழுங்கிய பின்பு

‘மந்திர் மேம் மூர்த்தி; பாஹர் ஹை ஈஸ்வர்’ என்று

ஊழி ஏப்பமிட்டு கனிவாகச் சிரித்தான்.

 

கங்கையில் மிதக்கவிடப்

பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில்

அழியாச் சுடர்களைப் பார்த்தேன் அப்போது.


 சுகுமாரன்

நன்றி – கனலி

இதையும் படிங்க

பறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி

மெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...

கவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்

மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.

கவிதை| பசி | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

ஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்!

பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர்,  இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...

கவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா

என் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...

காதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி

"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்...." காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்."அம்மா... அவள்...

தொடர்புச் செய்திகள்

தீபச்செல்வனின் நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகிறது!

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகின்றது. போர்ச் சூழலில் பிறந்த ஒரு போராளிக்கும் அவனது தம்பிக்கும் இடையிலான பாசமாகவும் பார்வையாகவும் அமையும் நடுகல் தமிழில் பெரும் கவனத்தை...

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

’வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து; நிச்சயம் மீட்பேன்!’ – ஜெ.தீபா

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆக்கியதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வாரிசான ஜெ.தீபா தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...

வலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்

"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...

குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...

மேலும் பதிவுகள்

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா

'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...

காற்று மாசடைதலால் வருடத்திற்கு 70 இலட்சம் பேர் உயிரிழப்பு!

காற்று மாசுபாட்டால் உலகில் வருடத்திற்கு 70 இலட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாக உயிரிழப்பதாக  உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்றுமாசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாடகர்களின் பாடகன் எஸ்பிபி | வெ. சந்திரமோகன்

எஸ்.பி.பியின் இழப்பு தந்த வலியிலிருந்து நம்மில் பலரால் இன்னமும் வெளிவர முடியவில்லை. இந்த நிமிடம்வரை எங்கேனும் ஒருவர், ‘பக்கத்தில் நீயும் இல்லை…’ எனும்...

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...

லங்கா பிரீமியர் லீக் | விண்ணப்பங்கள் ஏற்பு

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான நடவடிக்கைகளை...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானதோடு ...

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

துயர் பகிர்வு