கிளிநொச்சி கந்தன் பவனி | கேசுதன்

தொடுவானம் மேவிடும் போது
உன் திருவடி பணிந்தேன் தெய்வமே
ஓரார் ஒளியெழுப்பி உன் உன்னத மரபிசை உணர்ந்தோம்
பூவண்ணம் புடைசூழ அரோகரா கவச ஒலியுடன் தொண்டர் உன் திருவடி பின்தொடர
ஓங்கிய உன்பெயரும் காதுகள் கிழிக்கவே
ஒப்பில்லா உன் திருவடி தங்கிய தேரும் உருண்டோடியது
வடங்களும் வடதிசை நோக்க தென்திசை
உன் தெம்மாங்கும் வான்முழங்க அரோகரா கரகோசமுடன் ஆடிஅசைந்து வரும் உன் திருவடியை
பணியவே பலகூட்டம் பால் செம்பும் பறவை காவடியும்
உன்திருவடி வணங்கி செல்லும் அழகுதான் என்னவோ!
கிளிநகர் எங்கும் உன்திருநாமம் சொல்லியே பூரிக்கும்
புன்னகை சிந்தும் உன் முகம் காண வரார் எவருண்டு
எள்ளி நகையாடும் உன்னழகும் அழகுக்கு மெருகேற்றும்
நாதஸ்வரமும் பவனிவர கந்தவேல் முருகனின் படை வீரம் பேசும் ஒரு குழுமம் .
ஒற்றிய கை தலைமேல் பற்றியே ஒரு குழுமம் புடைசூழ
ஓங்கார ஒலியுடன் கந்தவேல் பெருமான் தன் நகர்வலம்
நிறைவேற்றினான்.

கேசுதன்

ஆசிரியர்