செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இயற்கை | கேசுதன்

இயற்கை | கேசுதன்

0 minutes read

தாளிணிது தமிழினிது
தனம் கொண்ட மகனினிது
மனம் கொண்ட மகளினிது
பணம் கெட்ட பாசமினிது
உயிர்கொண்ட உறவினிது
அறம்கொண்ட அயலோனினிது
புகழினிது புகழ் கொண்ட
களமினிது……

கரை தட்டும் அலையினிது
அலைமேவும் கடலினிது
கடல் தொடும் வானமினிது
வரும் காற்றுமினிது
வசந்த காற்றுமினிது……

கதிர்கொண்ட பயிரினிது
ஊட்டிய நீரினிது
பூட்டிய ஏரினிது
ஏரோடிணைந்த அவனுமினிது…..

காம்போடிணைந்த பூவழகு
பூவோடிணைந்த தேனலகு
மலர் கொண்ட மகரந்தமழகு
மலர் கொந்தும் மங்கையழகு
மங்கை சூடிய குழலழகு……

கருமுகில் கூட்டிய காற்றினிது
கார்முகில் கொட்டும் மழையழகு
மழையழகு மயங்கும் மங்கையழகு
மங்கை மருவிய நீரினிது
அந்நீர் அருந்திய மண்ணழகு…….

தீயழகு தீண்டிடா தேசமழகு
தீபம்மெற்றிய தீயழகு
தூண்டிய திரியழகு
ஊற்றிய நெய்யழகு
ஏற்றிய பெண்மையழகு
தீபமயங்கிய தெய்வமினிது…….

அனைத்தும் படைத்த அவனினிது
அவனால் இயங்கும் இயற்கையுமழகு
இயற்கை நமக்களித்த நன்கொடையும்
அழகோ அழகு….

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.