June 7, 2023 7:09 am

நவயுக வகுப்பறை | குறிஞ்சியூர் வில்வரசன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

ஒவ்வொரு நாளும்
வகுப்பறைக்குள் நுழையும் போதெல்லாம்
கண்கள் தேடுகின்றன
எனது பிரதியை

இறுதியும் முதலுமற்ற
ஆசனத்தில் பௌவியமாய்
வால் மடக்கி உட்கார்ந்திருந்த
எனது பிரதிகள்
இப்போதெல்லாம்
கூர்படைந்திருந்தனர்

சட்டைக் காலர்களை மடக்கி
வாரி இழுக்காத தலைகளுடன்
ஒற்றை கொப்பியுடன்
ஒய்யாரமாய் பள்ளிக்கு வரும் அவர்கள்
பிரம்பின் சொடுக்குகளுக்கு
பயந்து சொற்கள் உதிர்க்கும்
எனது தலைமுறையின்
பிரதிகளாய் இப்போதில்லை..

ஒவ்வொரு காலையிலும்
கோபமாய் நீளும்
அறச்சொற்பொழிவுக்கு பிறகு
கொஞ்சம் அமைதியாய் இருக்கும்
அந்த வகுப்பறையில்
மீண்டும் மீண்டும்
நினைவில் அசைகின்றன
என் வாத்தியார்களின் கோபக்குரல்கள்

குறிஞ்சியூர் வில்வரசன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்