Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடற் பருமனும் ஏற்படுத்தும் காரணிகளும் .

உடற் பருமனும் ஏற்படுத்தும் காரணிகளும் .

1 minutes read

  • குடிப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்கள்.
  • வாழ்க்கையில் சந்தோஷம் அற்ற நடுத்தர வயதினர்.
  • சந்தோஷமான வயோதிகர்கள்.
  • நல்ல ஆரோக்கியம் உள்ள இளம்பெண்கள்.
  • நல்ல பணவசதி படைத்தவர்கள்.
  • மிகவும் மோசமான/ஆரோக்கியமற்றவர்கள்.

அறவே குடிப்பழக்கத்தை நிறுத்துவது அல்லது சிறிது சிறிதாக குறைத்துக் கொள்வதே இளைஞர்கள் அதிக பருமனைக் குறைக்க ஒரே வழி.அதிக கவலை, மன உளைச்சல், ஏராளமான எதிர்பார்ப்புகள், அளவுக்கு அதிகமான பேராசை, பணத்திமிர், ‘நான் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறேன்’ என்ற அகம்பாவம், தன் உடலைப் பற்றியோ, எதைப் பற்றியுமோ கவலைப்படாத நபர்கள் என மேலே கூறப்பட்ட அனைவருக்கும் நல்ல உடற்பயிற்சியோடு கூடிய மனோதத்துவ சிகிச்சையும் (Increasing Exercise Mixed With Psycho -Social Counselling) அளிக்க வேண்டியது மிக அவசியம் என விஞ்ஞானிகள் வற்புறுத்துகின்றனர்.

பருமனில் இருந்து ஆரோக்கியமுள்ள இளைஞர்கள் மீண்டும் சராசரி உடல்நிலைக்கு திரும்புவது கடினமான காரியமல்ல. உடற்பயிற்சியோடு கூடிய உணவுக் கட்டுப்பாடுதான் பருமனை குறைக்க அருமையான அற்புதமான வழி! நல்ல உடற்பயிற்சி செய்யாத காரணத்தால்தான் உடல் பருமனாகி விட்டது என்று கூறுவது முட்டாள்தனமான வாதம். மோசமான உணவுப் பழக்கத்தையே நாம் சாட வேண்டியுள்ளது. இதோடு கூடிய, உட்கார்ந்த இடத்தை விட்டு அணு அளவு கூட அசையாத தற்கால வாழ்க்கைமுறையும் அதிக பருமன் அடைய முக்கிய காரணமாக அமைகிறது. அடிப்படை உடல் உழைப்புடன் கூடிய அளவான, தேவையான உணவே, உடலை வலிமையுடனும் அழகான தோற்றத்தோடும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பருமன் ஆசாமிகளின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்திருக்கிறது. கண்ட நேரங்களில், தேவைக்கு அதிக உணவு வகைகளை அடைப்பதால் மனிதர்களின் இடுப்புப் பகுதி பெருத்துக் கொண்டே செல்கிறது. உடலுக்கு வேண்டிய, அவசியமான, அளவான உணவே அனைவருக்கும் தேவை. உண்ட உணவு செரிக்க அடிப்படை உடல் உழைப்பு மிகவும் முக்கியம். நல்ல உணவும் அடிப்படை உடல் உழைப்பும் நமது அழகான, ஆரோக்கியமான உடலை பேணிப் பாதுகாக்கும்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More