குழந்தைக்கு வயிற்று வலியா??

குழந்தையின் வயிற்று வலியை தாய்ப்பால் மூலமாக சரி செய்ய தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள்:

குழந்தைக்கு வயிற்று வலி குறைய – பூண்டு:-
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடும் உணவில் அதிகளவு பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு உணவில் பூண்டு அதிகம் சேர்த்து கொள்வதினால் தாய்ப்பால் வழியாக பூண்டு சத்து குழந்தைக்கு சேர்வதால் குழந்தையின் வயிற்று வலி குணமாகும்.

குழந்தை வயிற்று வலி மருத்துவம் – இளஞ்சூடான ஓத்திடம்:-
குழந்தையின் வயிற்று வலி குறைய (Baby Stomach Pain Home Remedy), குழந்தையின் வயிற்றில் இளஞ்சூடான ஒத்தடத்தை 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொடுப்பதினால், குழந்தையின் வயிற்றில் இரத்த ஓட்டம் நன்கு சுரக்கும். இதனால் குழந்தையின் வயிற்று வலி குணமாகும்.

குழந்தைக்கு மசாஜ் செயுங்கள்:-
குழந்தையை சமமான தளத்தில் படுக்க வைத்து, குழந்தையின் வயிற்றில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள்.

தொப்புள் சுற்றி எண்ணெயைத் தடவுங்கள். இதனால் செரிமானம் சீராகும். வாயு நீங்கும். குழந்தையின் வயிற்று வழியும் சரியாகிவிடும்.

குழந்தைக்கு வயிற்று வலி சரியாக பெருங்காயம்:-
இளஞ்சூடான நீரில் சிறிதளவு பெருங்காய தூளை கலந்து, நன்றாக குழைத்து கொள்ளவும், இந்த பேஸ்டை குழந்தையின் தொப்புளில் தடவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் வாயு தொல்லை நீங்கும். இதனால் குழந்தையின் வயிற்று வலியும் குறைந்து விடும்.

குழந்தையின் பாதத்தை லேசாக அழுத்தி விடுங்கள்:-

குழந்தையின் பாதத்தில் நடுப்பகுதியில் உள்ள புள்ளிகள் வயிறு தொடர்பானவை. அங்கு சில நொடிகள் வரை மிதமான அழுத்தம் கொடுக்க கொடுக்க குழந்தையின் வயிறு வலி பிரச்சனை சரியாகும்.

குழந்தை வயிற்று வலி மருத்துவம் – இஞ்சி:-
குழந்தைக்கு வயிற்று வலி குறைய (Baby Stomach Pain Home Remedy) சிறிதளவு இஞ்சியை பொடிதாக சீவி, ஒரு டம்பர் சூடான நீரில் துருவிய இஞ்சியை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி குழந்தைக்கும் கொடுக்க வேண்டும்.

இந்த நீர் குழந்தைக்கு வயிற்று வலியை (Baby Stomach Pain Home Remedy) சரி செய்யும். இந்த கை வைத்தியத்தை இரண்டு வயது முடிந்த குழந்தைக்கும் பின்பற்ற வேண்டிய, கை வைத்தியம் ஆகும்.

ஆசிரியர்