Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தூக்கத்தை அதிகரிக்காதே!

தூக்கத்தை அதிகரிக்காதே!

1 minutes read

ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கமே போதுமானதாகும்.இந்த அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நமக்கு பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.அந்தவகையில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று இங்கு பார்ப்போம்.

8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் முதலில் பாதிக்கப்படுவது உடல் எடை தான். அதிக தூக்கம் உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்து விட கூடும்.
நீண்ட நேரம் தூங்குவதால் மிக குறைந்த காலத்திலே இதய நோய்கள் வந்து விடுகின்றது.
அதிக நேரம் தூங்குவதால் மூளையின் திறன் குறைய தொடங்கும். மேலும், ஞாபக திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். புத்தி கூர்மையையும் இதனால் பாதிக்கப்படும்.
8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு நிச்சயம் தலைவலி பிரச்சினை உண்டாக கூடும். அதிக நேரம் தூங்குவதால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பலவித பிரச்சினைகள் உண்டாகும்.
8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவோருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இதனால் ஹார்மோன் பாதிப்பும் ஏற்படும். உங்களின் தூக்கம்படி படியாக உறுப்புகளையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.
8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இதனால் பலவித உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More