அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு:கற்றாழையின் பக்க விளைவுகள்


கற்றாழையால் பல நன்மைகள் ஏற்படும் என்பதை பார்த்தோம். இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் அடங்கியுள்ளது. எனினும், அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, இதனை உபயோகிப்பதால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழையில் உள்ள எரிச்சலூட்டும் குணங்களால் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது கர்ப்பிணி பெண்களின் கருப்பை சுருக்கங்களை அதிகரிக்க கூடும் என்பதால் பிரசவ சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

கற்றாழை உடலில் உள்ள போட்டாசியம் அளவை குறைத்து, மேலும் சீரற்ற இதயத் துடிப்பு, பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்த கூடும் என்பதால் முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் இதனை சாப்பிட வேண்டாம்.

கற்றாழையில் உள்ள லேடெக்ஸ் வயிற்றில் அதிகமான பிடிப்புகள் மற்றும் வலிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று பிரச்சனைகள் உள்ளோர் தவிர்ப்பது நல்லது.

இதன் ஜெல்லானது கண்களில் சிவத்தல், தோல் தடிப்புகள், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு போன்றவைகள் பெரும்பாலானோருக்கு ஏற்படுத்துகிறது.

கற்றாழை குறித்து பல தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்த்தோம். வெயில் காலம் துவங்கியுள்ள இத்தருணத்தில் இந்த தகவல்கள் நிச்சயம் உங்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகிறோம்.

ஆசிரியர்