அற்புத மூலிகை இதை பற்றி தெரியுமா??

அற்புத மூலிகையான ஆவாரம் பூ குடலை சுத்தப்படுத்துதல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

கேசியா என்ற பிரிவைச் சேர்ந்த ஆவாரம் தாவரம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், இதன் பலன் அதிகமானது. இந்த தாவரத்தின் இலைகள், பழங்கள், பூக்கள் போன்றவையும் மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகும்.

இந்த தாவரத்தின் மருத்துவ பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

மலச்சிக்கல்
இதன் இலைகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இதை நிரூபித்து உள்ளது. இதில் உள்ள சென்னோசைடு, அண்ட்ரோகுவினோனின் போன்ற மருத்துவ பொருட்களும் உள்ளன.

இவை ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு மலத்தை இலகுவாக வெளியேற்றுகிறது. இந்த இலைகளை சாப்பிட்ட 6-12 மணி நேரத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

குடலை சுத்தப்படுத்துதல்
ஆவாரம் பூ மலமிளக்கியாக செயல்படுவதால், குடலில் தங்கியுள்ள கசடுகளை சுத்தம் செய்கிறது. விளக்கெண்ணெய் உடன் இதனை சேர்த்து பயன்படுத்துவது கூடுதல் பலனளிக்கும்.

உடல் எடை இழப்பு
ஆவாரம் உடலில் மெட்டாபாலிசத்தை தூண்டக் கூடியது. இந்த ஆவாரம் டீ குடித்து வந்தால் பசியை குறைத்து, உடல் எடையை வெகுவாக குறைக்கிறது. இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் அதிக உடல் எடை இழப்பு ஏற்படலாம். எனவே சரியான அளவை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாராஸிட்டிக் தொற்று
உடலில் உள்ள புழுக்கள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் ஆன்டி பாராஸிட்டிக் தன்மை ஆவாரத்தில் உள்ளது. உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் இந்த புழுக்களை குடலில் வளர விடாமல் ஆவாரம் தடுக்கும்.

ரத்தக் கசிவு
உடலில் ஏற்படும் ரத்தக் கசிவை போக்க இந்த ஆவாரம் மூலிகை உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் வரும் குடலிறக்கம், குடலில் ரத்தக் கசிவு போன்றவற்றிற்கு உதவுகிறது. இதன் சென்னோசைடு என்ற பொருள் மலவாய் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

டைசெப்டிக் நோய்
டைசெப்டிக் எனும் நோய்க்கு சிறந்த மருந்தாக ஆவாரம் உள்ளது. வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சமநிலையாக்கி சீரணத்தை மேம்படுத்தும் இந்த ஆவாரத்தை எடுத்துக்கொண்டால், சீரண பிரச்சனையை எளிதில் சரி செய்து விடலாம்.

குடல் ஆரோக்கியம்
ஆவாரத்தில் உள்ள மருத்துவத்தன்மை குடலில் ஏற்படும் அழற்சியை போக்கும். இதில் உள்ள பாராகோல் என்ற பொருள் இரைப்பையில் நச்சுக்கள் தேங்காமலும் பாதுகாக்கும்.

விளைவுகள்
அதிகளவு ஆவாரம் மூலிகையை எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் கோமா ஆகியவை ஏற்படும். எனவே அல்சர், க்ரோன் நோய், குடல் பாதிப்பு, வயிற்றுப் போக்கு, நீர்ச்சத்துயின்மை, இதய நோய்கள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்.

ஆசிரியர்