பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்

இலங்கை சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். மரணித்த பெண் நோயின் கொடுமையைத் தாங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ தினமான நேற்றுத் திங்கட்கிழமை காலை அப்பெண் நோயின் கொடுமை தாங்க முடியாமல் தனக்குத்தானே தீ மூட்டி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அப் பெண்ணின் உறவினர்கள் விசாரணையின் போது தெரிவித்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு வேதனைகள் ஒண்டும் புதிதல்ல, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மனவலிமையோடு தாயகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த மக்கள் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. ஒரு நோயின் கொடுமை தாங்கமுடியாத அளவுக்கு தற்கொலைதான் முடிவென நினைக்கும் அளவுக்கு தாயகத்தில் தமிழர்கள் இருக்கின்றார்களா என்பது ஆச்சரியமான விடையமாக உள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சுன்னாகம் பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் அதிகாரி ஆர். தனுசனினால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆசிரியர்