Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

2 minutes read

G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக மத்திய லண்டனில்  11ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த கட்டடத்தை பிற்பகல் பொழுது லண்டன் கலகம் அடக்கும் பொலிசார் சுற்றிவளைத்து சுமார் 57 பேரை கைது செய்துள்ளார்கள். அடுத்த வாரம் G8 உச்சி மாநாடு நடைபெற இருப்பதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடுத்துவரும் ஒரு வாரத்துக்கு போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
 800px-G8_leaders_confer_together
உலகின் 8 செல்வந்த நாடுகள் சேர்ந்து G8 என்ற கூட்டமைப்பை உருவாக்கி உலகப் பொருளாதார இஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் தமது பங்களிப்பினை ஏனைய நாடுகளுக்கு உதவுவதற்கும் முயட்சிக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகள் தமக்குள் பல்வேறுபட்ட கூட்டமைப்பினை உருவாக்கினாலும் G8 (Group of  8) உலக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றது.
முதன்முதலில் 1975 பிரான்ஸ் இன் ஆலோசனையின் பேரில் பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா இணைந்து G 6 ஐ உருவாகினார்கள். இவ் அமைப்பு அடுத்து வந்த ஆண்டில் கனடாவையும் இணைத்து G 7 ஆக மாறியது. 1997 ம் ஆண்டில் ரஷ்யா இணைந்தவுடன் இப்போதுள்ள G 8 ஆக மாற்றமடைந்தது.
ஒவ்வொரு வருடமும் G 8 இன் உச்சி மாநாடு ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுவது வழக்கம். இவ் வருடம் பிரித்தானியாவில் இம்  மாதம்  17ம் 18ம் திகதிகளில் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
g8-6209qw_1744101a
3814610443

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More