உலகில் மற்றுமொரு நாட்டில் மக்கள் புரட்சி : பிரேசில் நிலைக்குமா வீழுமா? உலகில் மற்றுமொரு நாட்டில் மக்கள் புரட்சி : பிரேசில் நிலைக்குமா வீழுமா?

தென் அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள். தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட நாடு பிரேசில் ஆகும். நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஊழல் குற்றச்சாடை முன்வைத்துள்ளார்கள்.

எதிர்வரும் 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்கு அமைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாகவும், எதிர்வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் மிகப்பாரிய அளவில் அரசு ஊழல்களை மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் போக்குவரத்து கட்டணங்களில் ஏற்பட்ட 20 சத அதிகரிப்பினை தொடர்ந்து மேலும் அதிருப்பதி கொண்டனர்.

உலகின் ஏனைய நாடுகளான எகிப்து, ஏமன், லிபியா, சிரியா போன்ற நாடுகளின் வழியில் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். பிரேசிலின் முக்கிய நகரங்களான சௌ பௌலோ, ரியோ மாறும் தலைநகர் பிறேசியா ஆகிய நகரங்களில் இவ் ஆர்ப்பாடங்கள் நடைபெறுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக லண்டனில் இன்று பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள், அத்துடன் மேலும் இரண்டு ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இன்றைய தினம் நடைபெறுகின்றன.

பிரேசிலில் போக்குவரத்துக் கட்டன அதிகரிப்புடன் தொடங்கிய இவ் ஆர்ப்பாட்டம் இப்போது அரசின் முக்கிய ஊழலுக்கு எதிராகவும், கல்வி , சுகாதார சேவையில் உள்ள குறைபாடுகளுக்கு எதிராகவும் மாற்றமடைந்துள்ளது. இதே வேளை பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப் ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக சாடியுள்ளார்.

மக்களுடைய எழுச்சி பல நாடுகளில் புதிய ஆட்சி மாற்றத்தினை அண்மைக் காலங்களில்  ஏற்படுத்தி வருவது இன்று உலகை பிரேசில் பக்கம் திருப்பியுள்ளது. அத்துடன் அடுத்துவரும் உலககோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளும் பிரேசிலில் நடைபெற இருப்பதால் இவ் மக்கள் போராட்டம் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றது.

Brazil_protests_june_295x200

_68231586_belem

ஆசிரியர்